சல சலவென ஓடும் நதியினிசை ஓசை போல்
கல கலவென சிரித்தாடும் கள்ளமிலா செல்லங்களே
காலை மாலை கடவுளை வணங்கிடுவீர்
காலமெல்லாம் இறையருள் உணர்ந்திடுவீர்
ஆடி வரும் தேருனக்கு அன்னை உண வூட்டுவார்
ஓடியாடி விளையாடி உடல் நலம் பேணிடுவீர்
கற்பவை காலத்தில் கற்றிடுவீர்
கற்றதை பயனுற செயல்படுவீர்
ஈன்ற தாய் தந்தை சொல் கேட்டிடுவீர்
சான்றோன் எனப் புகழ் பெற்றிடுவீர்
ஆசான் பெரியோர் பணிந்திடுவீர், அவர்
ஆசியுடன் நலன் பல பெற்றிடுவீர்
நல்லது நினைத்து நல்லது சொல்லிடுவீர்
நல்லதே செய்து நாளும் வளர்ந்திடுவீர்
இத்தகு செல்லங்கள் இருக்கையிலே
எத்தகு சிறப்புறும் தாய்நாடே.
(நாகை வை. ராமஸ்வாமி)
--
V. Ramaswamy (நாகை வை. ராமஸ்வாமி)
http:/nampakkam.blogspot.com
No comments:
Post a Comment